
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை நேரில் சந்திக்க கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான இதய பரிசோதனைக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட ராமதாஸுக்கு பல்வேறு பரிசோதனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மூன்று நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், வருகின்ற அக். 12 ஆம் தேதிவரை ராமதாஸை நேரில் சந்திக்க யாரும் வரவேண்டாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாமக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ், மருத்துவ பரிசோதனை முடிந்து நேற்று (7.10.2025) மாலை மருத்துவமனையில் இருந்து (டிஸ்சார்ஜ் ஆகி) நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.
மருத்துவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொண்டதின் பேரில், மருத்துவர்கள் அறிவுறுத்தல் படி 12.10.2025 வரை ஒய்வு எடுக்க உள்ளார். எனவே ராமதாஸின் பார்வையாளர் சந்திப்பு 12.10.2025 வரை ரத்து செய்யப்படுகிறது.
மேலும் ராமதாஸை சந்திக்க விரும்பும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பார்வையாளர்கள் வருகின்ற 13.10.2025 திங்கள்கிழமை முதல் வழக்கம் போல் தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை நேரடியாக சந்திக்கலாம். 12 மணிக்கு மேல் பார்வையாளர்கள் சந்திப்பு இல்லை என்பதும் அறிவுறுத்தப்படுகிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.