
ராகுலை சந்திக்க விஜய்க்கு யார் அனுமதியும் தேவையில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் வாக்குத் திருட்டைக் கண்டித்து வேலூர் மண்டி தெருவில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் விஜய் குறித்து மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாக எழும் விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கே.எஸ். அழகிரி, ”கரூர் விவகாரத்தில் மென்மையான போக்கை கடைபிடிக்கிறோம் என்பதற்காக எல்லாம் கூட்டணி மாறாது, கூட்டணி எந்தக் காரணம் கொண்டும் உடையாது.
அந்த அளவிற்கு பலவீனமான கூட்டணி நாங்கள் இல்லை, எங்கள் கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி” என்றார்.
முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லிவிட்டுதான் ராகுல் காந்தி விஜய்யிடம் பேசியதாக செல்வப்பெருந்தகை கூறியிருந்தது குறித்து கேட்டதற்கு, “செல்வப்பெருந்தகை அந்த பொருள்பட பேசவில்லை, நீங்கள் அதுபோன்று உருவாக்க வேண்டாம்.
எங்கள் தலைவர் ராகுல் அகில இந்திய தலைவர் அல்ல, அகில உலக தலைவர். விஜய், ராகுல் காந்திக்கு நீண்ட கால நண்பர், பல நேரங்களில் சந்தித்துப் பேசி இருக்கிறார்.
விஜய், ராகுல் காந்தியை சந்திக்க வேண்டும் என்றாலோ, பார்க்க வேண்டும் என்றாலோ, அவரிடம் பேச வேண்டும் என்றாலோ, அவர் யாருடைய அனுமதியையும் பெறவேண்டிய அவசியம் இல்லை.
நேரடியாக, அவர் நினைக்கும் போதேல்லாம் பேசலாம். ஆக, இதற்கும் அதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை” என்றார்.
இதையும் படிக்க: ரயில் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.