
கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள 10.1 கி.மீ. மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.
தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலமாக கட்டப்பட்டுள்ள இந்த பாலத்துக்கு, ஜி.டி. நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வருகைதந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலில், கொடிசியாவில் நடைபெற்ற உலக புத்தொழில் மாநாட்டை தொடக்கிவைத்த முதல்வர் ஸ்டாலின், பின்னர், கோவை உப்பிலிபாளையத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் சிறிது தொலைவு நடந்துசென்ற முதல்வர் ஸ்டாலின், பின்னர் தனது வாகனத்தில் பயணித்தார்.
தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் - அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நான்கு வழித்தட மேம்பாலம் ரூ. 1,791 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிக நீளமான இந்த மேம்பாலத்துக்கு கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.