
வடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் புயல் சின்னம் வரும் அக். 22 ஆம் தேதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் அக். 22 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி, அடுத்த 2 நாள்களில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்ட நீண்ட கால வானிலை கணிப்பின் அடிப்படையில் வருகின்ற வட கிழக்கு பருவ மழை காலத்தில் (அக்டோபர் - டிசம்பர் 2025) தமிழகத்தில் தென்கோடி பகுதிகளைத் தவிர்த்து அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பொதுவாக இயல்பு (440 மி.மீ) இயல்பிலிருந்து சற்று அதிகமான (சுமார் 500 மி.மீ) மழைக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
தமிழக தென்கோடி பகுதிகளில் பொதுவாக வடகிழக்கு பருவமழை இயல்பு இயல்பிலிருந்து சற்று குறைவாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தவெக கரூர் மாவட்ட செயலரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.