
கர்நாடகத்தில் இருந்து கோவை வழியாக கேரளத்திற்கு லாரியில் கடத்தப்பட்ட 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு பேருந்து, ரயில்கள் மற்றும் வாகனங்களில் அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுக்கும் விதமாக குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை காவல் துறையினர் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் ரயில் மற்றும் வாகனங்களைச் சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை காவல் துறையினர் மற்றும் சார் பதிவாளர் ஞானப்பிரகாசம் தலைமையிலான குழு தமிழக - கேரளம் எல்லையான மதுக்கரை பைபாஸ் சாலையில் உள்ள டோல்கேட் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் ரேஷன் அரிசி கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தல் அரிசியை மற்றும் லாரியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் தர்மபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பது தெரியவந்தது.
இவர் கர்நாடகத்தில் இருந்து கேரளத்திற்கு 25 டன் டன் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.