
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த நாகேந்திரனின் உடலை, தங்கள் தரப்பு மருத்துவரைக் கொண்டு உடல் கூராய்வு செய்ய உத்தரவிடுமாறு அவரது மனைவி வைத்தக் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ரௌடி நாகேந்திரனின் மனைவி, தனது கணவரின் உயிரிழப்பு குறித்து சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று முற்பகலில் விசாரிக்கப்பட்டது.
தங்கள் தரப்பு மருத்துவரை வைத்து உடல் கூராய்வு செய்யப்பட வேண்டும் எனவும் உடல் கூராய்வு முழுவதையும் விடியே பதிவு செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார், உடலை அவர்கள் தரப்பு மருத்துவரை வைத்து உடல்கூறாய்வு செய்ய உத்தரவிட முடியாது, ஏற்கனவே இதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களைக் கொண்டுதான் உடல் கூராய்வு செய்ய முடியும் என்றும் கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரத்தில் 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் கல்லீரல் பிரச்சினையால் சிறையில் இருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நாகேந்திரனின் உடல்நிலை மிகவும் மோசமானதால் நேற்று உயிரிழந்தார்.
பிரபல ரௌடியான நாகேந்திரனின் மனைவி தனது கணவன் நாகேந்திரனின் உயிரிழப்பு குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க... குறுஞ்செய்தியை திருடும் செயலி! பதிவிறக்கம் செய்தால் எல்லாம் காலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.