
ஒரு செல்போனுக்கு வரும் ஓடிபி உள்ளிடட் எஸ்எம்எஸ் அல்லது குறுஞ்செய்திகளைத் திருடி, மோசடியாளர்களுக்கு அனுப்புவதற்கென்றே ஒரு செயலி (APP) இருக்கிறது. அதனைக் கொண்டு மோசடியாளர்கள் பல மோசடிகளை நடத்தியிருக்கிறார்கள்.
இது குறுஞ்செய்தி பகிர்தல் செயலி மூலம் நடக்கும் மோசடி என்று அடையாளம் காணப்படுகிறது.
ஓடிபியை யாருக்கும் பகிர வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வரும் வகையில், செல்போனில் இருந்து ஓடிபியை திருடுவதற்கு என்றே மோசடியாளர்கள் ஒரு செயலியை உருவாக்கி விட்டனர்.
முதலில், மோசடியாளர்கள், ஒருவரது எண்ணை தொடர்புகொண்டு பேசுகிறார்கள். அல்லது சமூக வலைத்தளங்கள் மூலமாக பெரிய சலுகைகள் அல்லது பரிசுகள் கிடைக்கும் என்பது போன்ற விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.
அதனைப் பார்த்து ஏமாந்தவர்கள், மோசடியாளர்களை தொடர்புகொண்டால், இந்த சலுகைகள் அல்லது பரிசுகள் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
செயலிதானே, அது என்ன செய்து விடும், அதனால் என்ன ஆகும் என்பது தெரியாத அப்பாவி மக்கள், அவர்கள் சொல்லும் செயலியை பதிவிறக்கம் செய்துவிட்டால், ஒருவரது வங்கிக் கணக்கில் பணப்பரிமாற்றம் செய்யும்போது, பாதுகாப்புக்காக வரும் ஓடிபி எண்ணை, அந்த நபர் தனது செல்போனில் பார்ப்பதற்குள்ளாகவே, அந்த ஓடிபி எண், மோசடியாளர்களின் செல்போனுக்குச் சென்றுவிடும். எப்படி என்றால், உண்மைத் தெரியாமல் பதிவிறக்கம் செய்த அந்த செயலிதான் திருட்டுக் கும்பலின் தலைவன். அந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துவிட்டால், அந்த செல்போனுக்கு வரும் அனைத்துத் தகவல்களும் ஃபார்வேர்டு செய்யப்படும்.
எனவே, முன்பின் தெரியாத யார் சொன்னாலும், எக்காரணத்துக்காகவும் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யக் கூடாது என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.
சைபர் பாதுகாப்பு குறிப்புகள்
1. சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகள் மூலம் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
2. கூகுள் பிளே அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டுமே செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
3. எந்த ஒரு சலுகை குறித்தும் உண்மைத் தன்மையை ஆராயவும்.
4. வங்கிக் கணக்கை பாதுகாப்பாக வைக்கவும்.
5. உங்களுக்குத் தெரியாமல் நமக்கும் பணப்பரிமாற்றங்கள் குறித்து உடனடியாக புகாரளிக்கவும்.
சைபர் குற்றத்துக்கு இலக்காக வேண்டாம், அழையுங்கள் உதவி எண் 1930.
இதுபோன்ற சைபர் மோசடி குறித்த புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.
பண மோசடியாக இருப்பின், உடனடியாக புகார் அளித்தால் பணத்தை மீட்பது எளிதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.