
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரனின் மனைவி, தனது கணவரின் உயிரிழப்பு குறித்து சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இன்று மதியம் ஒரு மணி அளவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரத்தில் 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் கல்லீரல் பிரச்சினையால் சிறையில் இருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான நாகேந்திரனின் உடல்நிலை மிகவும் மோசமானதால் நேற்று உடல்நிலை குறைவால் உயிர் இழந்தார்.
பிரபல ரவுடியான நாகேந்திரனின் மனைவி தனது கணவன் நாகேந்திரனின் உயிரிழப்பு குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இவ்வழக்கு குறித்தும் உடற்கூறு மறு ஆய்வுகள் குறித்தும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று மதியம் 1 மணிக்கு இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிக்க... குறுஞ்செய்தியை திருடும் செயலி! பதிவிறக்கம் செய்தால் எல்லாம் காலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.