
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இருப்பாரா? என்ற கேள்விக்கு பாஜகவின் தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார்.
முன்னதாக, விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி. அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருக்கும் சூழலில், விஜய் தனது கொள்கை எதிரியாக கூறும் பாஜக அங்கம்வகிக்கும் அந்தக் கூட்டணியில் இடம்பெறுவாரா? என்பது தெரியவில்லை.
அப்படிக் கூட்டணி வைத்தால், பாஜகவை கழட்டிவிட அதிமுக தயாராக இருக்கிறதா? என்கிற கேள்வி எழுகிறது. பாஜகவை கழட்டி விட்டால் அதிமுகவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும் என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில், உங்கள் கூட்டணிக்கு விஜய் வருவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்து நயினார் நாகேந்திரன் பேசியதாவது: “எங்கள் கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்!
யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எல்லாவற்றுக்குமே ஜனவரி மாதத்துக்குப் பின் ஒரு முடிவு வரும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக ஆட்சி மாற்றம் உறுதி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.