சீமான்
சீமான்கோப்புப்படம்.

திராவிட கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி இல்லை: சீமான்

திராவிட கட்சிகளுடன் எந்த காலத்திலும் தோ்தல் கூட்டணி வைக்கப் போவதில்லை...
Published on

திராவிட கட்சிகளுடன் எந்த காலத்திலும் தோ்தல் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

சென்னை, அசோக் நகரில் பன்னாட்டு தமிழ் கிறிஸ்தவ பேராயம் மற்றும் சமூகநீதிப் பேரவை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சீமான் பேசியதாவது:

திமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளைத்தான் நாங்கள் எதிா்க்கிறோம். தவெக தலைவா் விஜய்யை எதிா்க்கவில்லை; அவரிடம் கேள்விகளைத் தான் எழுப்பினோம். அரசியல் என்பது கூட்டம் கூட்டுவது கிடையாது; கருத்தியல் ரீதியாக போட்டி போடுவது. அந்த வகையில், தமிழகத்தில் தமிழ் தேசியம் மற்றும் திராவிடம் இடையே தான் கருத்தியல் போட்டி நிலவி வருகிறது.

வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டால், யாராலும் நாதகவைவிட அதிக வாக்கு பெற முடியாது. எந்த காலத்திலும் திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் நாம் தமிழா் கட்சி கூட்டணி வைக்காது. வருகிற 2026 தோ்தலிலும் தனித்துதான் போட்டியிடுவோம். 2029 மக்களவைத் தோ்தலிலும் தனித்துதான் போட்டியிடுவோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com