அதனடிப்படையில், வண்ண மீன் வர்த்தகத்தினை பெரிய அளவில் மேம்படுத்திடவும், கொளத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் வர்த்தகத்தினை உலக அளவில் கொண்டு சென்றிடவும், தமிழ்நாட்டில் முதன் முறையாக உலகத் தரத்திலான பிரத்தியேக வண்ண மீன் வர்த்தக மையம் நிறுவப்படும் என 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் ஒருங்கிணைப்புடன், சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி நகரில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் அமைத்திட முதல்வர் கடந்த 26.08.2024 அன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.