
பெரிய சோரகை பகுதியில் அமைந்துள்ள சென்றாயப் பெருமாள் கோயிலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
சேலம் மாவட்டம், பெரிய சோரகை பகுதியில் அமைந்துள்ள சென்றாயப் பெருமாள் கோயிலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அதிலும் குறிப்பாக தேர்தல் நேரங்களில் பிரசாரம் தொடங்குவதற்கு முன்பு இந்த கோயிலில் தரிசனம் செய்துவிட்டுதான் தனது பிரசாரத்தையே தொடங்குவார்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இன்று காலை பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோயில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
கோயில் நிர்வாகம் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது.
சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்த சென்றாயப் பெருமாளை எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
இதன்பிறகு மேட்டூர் அணை நூறு ஏழு திட்டத்தில் வரும் நங்கவள்ளி பகுதியில் அமைந்துள்ள வைரனேரி மற்றும் சூரப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள வாத்துப்பட்டி ஏரியை பார்வையிட்டு விவசாயிகளைச் சந்திக்க உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.