
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தவெக மாவட்டச் செயலரின் ஜாமீன் மனு இரண்டாவது முறையாக நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
கரூரில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்புக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தவெக மேற்கு மாவட்டச் செயலர் மதியழகனை சிறப்புக் குழுவினர் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இந்நிலையில், தனக்கு ஜாமீன் வேண்டும் என்று தனது வழக்குரைஞர்கள் மூலம் மதியழகன் கடந்த சனிக்கிழமை கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை திங்கள் கிழமை நடைபெற்றது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இளவழகன், ஜாமீன் மனுவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
ஏற்கனவே கடந்த 8-ம் தேதியும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்த மதியழகனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி: அண்ணாமலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.