பேரவை வளாகத்தில் பாமக எம்எல்ஏக்கள் தர்னா!

பேரவை வளாகத்தில் பாமக எம்எல்ஏக்கள் தர்னாவில் ஈடுபட்டது பற்றி...
பாமக எம்எல்ஏக்கள் தர்னா
பாமக எம்எல்ஏக்கள் தர்னா
Published on
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் எம் எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை காலை தர்னாவில் ஈடுபட்டனர்.

பாமக நிறுவனா் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையேயான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவை பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி, பாமக கொறடாவாக அருள் ஆகியோரை நீக்கக் கோரி கடந்த மாதம் அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைச் செயலா் சீனிவாசனை சந்தித்து கடிதம் கொடுத்தனா்.

ஆனால், இதுவரை பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி நீக்கப்படாத நிலையில், இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, பேரவை வளாகத்தில் அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் மயிலம் தொகுதி சிவகுமாா், மேட்டூா் தொகுதி சதாசிவம், தருமபுரி தொகுதி வெங்கடேஸ்வரன் ஆகியோர் தர்னாவில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் நினைவூட்டல் கடிதத்தையும் வழங்கினர்.

Summary

PMK MLAs stage dharna at the Assembly premises

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com