
சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது அவசர ஊர்திக்கு வழிவிடுவதில் இடையூறு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது அதிகப்படியாக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் மற்றும் சிறப்பு விசாரணைக் குழுக்கள், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு பதிலாக சிபிஐ விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசாரத்தின்போது அவசர ஊர்திக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். இவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையும் படிக்க | சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.