
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக் கழக மசோதா மீது ஆளுநர் கூறியிருக்கும் கருத்துகளை நிராகரித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பேரவைக்கே சட்டமியற்றும் அதிகாரம் இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்த எக்ஸ் பதிவில் அவர் கூறியதாவது, ``சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கே சொந்தம்.
தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்ட முன்வடிவு தொடர்பாக ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்ககூடிய வார்த்தை அடங்கிய பகுதிகளைத் தமிழ்நாடு சட்டப்பேரவை நிராகரித்தது’’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சி: இபிஎஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.