
திராவிடத்தின் மாசற்ற வாரிசு அதிமுகதான் என்று கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மக்களால், மக்களுக்காக இயங்கும் ஒப்பற்ற இயக்கமாம் நம் அதிமுகவி-ன் துவக்க விழாவான இன்று, #அண்ணா_வழி_திராவிடம் இணைய இதழின் அச்சுப் பிரதியை வெளியிட்டேன்.
சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை ஆகிய உயரிய விழுமியங்களால் கட்டி எழுப்பப்பட்ட திராவிடக் கொள்கையை செயல் வடிவமாக்கி, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்த இயக்கம் அதிமுக.
ஆனால், நாம் உயர்த்திப் பிடித்த நம் உன்னதக் கொள்கையாம் திராவிடத்தை, தன் குடும்ப நலனைக் காக்கும் கவசமாக மாற்றிவிட்டது திமுக முதல் குடும்பம்.
தீயசக்தி திமுக-வின் தந்திரங்களை, சூதுகளைத் தோலுரித்து, உண்மையான திராவிடத்தின் மாசற்ற வாரிசு அஇஅதிமுக தான் என்ற வரலாற்று பறைசாற்றும் வகையில், அதிமுக ஐடிவிங்
தொகுத்துள்ள இந்த மாதம் இருமுறை இணைய இதழை கட்சி உடன்பிறப்புகளும், பொதுமக்களும் தவறாமல் படித்து, தங்களுக்காக எப்போதும் உழைக்கும் இயக்கமான
அதிமுகவி-ன் புகழுக்கு மென்மேலும் வலுசேர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.