திருவிடைமருதூர் அருகே லாரி - அரசுப் பேருந்து மோதி விபத்து! 20 பேர் காயம்

திருவிடைமருதூர் அருகே லாரி - அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்தனர்.
லாரி - அரசுப் பேருந்து
லாரி - அரசுப் பேருந்து
Published on
Updated on
1 min read

திருவிடைமருதூர் அருகே லாரியும் - அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

இடிபாடுகளில் சிக்கிய லாரி ஓட்டுநரை பல மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் மயிலாடுதுறை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் - கும்பகோணம் நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் இடிபாடுகளில் சிக்கி படுகாயத்துடன் உயிருக்குப் போராடிய லாரி ஓட்டுநரை பல மணி நேரம் போராடி ஜேசிபி இயந்திரத்தை கொண்டு மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

Twenty passengers on the bus were seriously injured in a head-on collision between a lorry and a government bus near Thiruvidaimarudur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com