
மதுரையில் இருந்து திருச்சி சென்ற கார் விராலிமலை அருகே திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கிருஷ்ணா பவன் என்ற உணவகத்துக்கு சொந்தமான கார் மதுரையில் இருந்து உணவகத்துக்கு தேவையான பேக்கிங் கவர்கள் வாங்கிக் கொண்டு விராலிமலை வழியாக சென்று கொண்டிருந்தது.
அப்போது வண்டியிலிருந்து லேசாக புகை வந்துள்ளது. இதனைக் கண்டு சுதாரித்துக் கொண்ட வாகன ஓட்டுநர் ஜலீல்(38) விராலிமலை கொண்டமா நாயக்கன்பட்டி பிரிவு அருகே உள்ள தனியார் உணவகம் முன்னால் காரை நிறுத்திவிட்டு வேக வேகமாக இறங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து லேசாக கசிந்த புகை திடீரென மளமளவென கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது. தீப்பிளம்பாக மாறியதால் உணவகத்தில் உணவருந்தி கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் உணவகப் பணியாளர்கள் பதற்றம் அடைந்தனர்.
இருப்பினும் எரிந்த கொண்டிருந்த காரில் தீயை அணைக்க முடியவில்லை. 10 நிமிடத்தில் கார் முழுவதும் எரிந்து முடிந்தது. இதுதொடர்பாக விராலிமலை காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.