
ஆவடி அருகே பட்டாபிராமில் நாட்டு வெடி தயார் செய்து விற்பனை செய்யும் இடத்தில் இன்று (அக். 19) மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
தீபாவளியையொட்டி வீட்டில் வைத்து நாட்டு வெடிகளைத் தயார் செய்து விற்பனை செய்துவந்த நிலையில், நாட்டு வெடி வெடித்ததில் தீப்பற்றி வீடு முழுமையாகச் சேதமடைந்தது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டத் தகவலின்படி 4 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது. இடிபாடுகளை சரி செய்யும் பணிகளில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பட்டாபிராம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆணையர் சங்கர், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். விபத்தில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா? என இடிபாடுகளை அகற்றித் தேடும் பணியைத் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | 22% ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசுக்கு வலியுறுத்தல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.