
விராலிமலை அருகே சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக் சேவை பழுதடைந்ததால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் வாகன ஓட்டிகள் அவதியாடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விராலிமலை அடுத்து பூதகுடி சுங்கச்சாவடி உள்ளது.
இவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன. மேலும், நாளை(அக். 19) திபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை நாள்கள் என்பதால் ஒரே நேரத்தில் அதிக அளவில் வாகனங்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தது.
இதனால், காலை முதலே போக்குவரத்து நெரிசலுடன் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து சென்ற வண்ணம் இருந்தது.
இதனால் சுங்கச்சாவடி பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
இந்நிலையில் நள்ளிரவு திடீரென பாஸ்ட் டேக் சேவை பழுதடைந்து சிறிது நேரம் வேலை செய்யவில்லை, இதனால் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
அதனால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் சுங்கச்சாவடி அதிகாரிகள் உடனடியாக பாஸ்டாக் சேவையை சரி செய்ததால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.
இதையும் படிக்க: பிகாா்: ஆளும் தே.ஜ. கூட்டணி வேட்பாளா் வேட்புமனு நிராகரிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.