
மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்று(அக். 19) ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, மலைப் பாதையில் உள்ள ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஹில்குரோவ் - அடர்லி இடையேயான பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், வழக்கமான மலை ரயில் சேவை மற்றும் விடுமுறைக்கால சிறப்பு மலை ரயில் சேவை, இன்று(அக். 19) ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பா் மாதம் இரண்டாம் பருவம் தொடங்கிய நிலையில், சிறப்பு மலை ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்தது.
இதனால் வழக்கமான ரயில் சேவைகளுடன், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 23 மாவட்டங்களில் மழை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.