தீபாவளி: தஞ்சாவூர் பெரிய கோயிலில் குவிந்த பக்தர்கள்!

தஞ்சாவூர் பெரிய கோயிலில் குவிந்த பக்தர்கள் குறித்து...
தஞ்சாவூர் பெரிய கோயில்
தஞ்சாவூர் பெரிய கோயில்
Published on
Updated on
1 min read

தீபாவளி திருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாடு முழுவதும் தீபாவளி திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளி திருநாளை முன்னிட்டு உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, இளநீர், கரும்புச்சாறு, தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பெருவுடையாருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Summary

A large number of devotees had darshan of the deity at the Thanjavur Big Temple on the occasion of Diwali.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com