
தீபாவளி திருநாள் கொண்டாடத்தைத் தொடர்ந்து, சென்னையில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசுபாட்டுத் தாக்கத்தைக் கண்டறிய சுற்றுப்புற காற்றின் தர ஆய்வையும் ஒலி மாசு அளவையும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பதிவு செய்தது.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடையிலான காற்றின் தரக் குறியீடு ‘நல்லது’ பிரிவிலும், 51 மற்றும் 100 இடைப்பட்டது திருப்திகரமானது, 101 மற்றும் 200 இடைப்பட்டது மிதமானது, 201 மற்றும் 300 இடைப்பட்டது மோசம், 301 மற்றும் 400 இடைப்பட்டது மிகவும் மோசமானது மற்றும் 401 மற்றும் 500 கடுமையானது என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில், தீபாவளிக்கு வெடித்த பட்டாசு காரணமாக, சென்னையில் காற்று தரக்குறியீடு சராசரியாக 154 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக பெருங்குடியில் காற்றின் தரக்குறியீடு 229 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
காற்றின் தரக்குறியீடு மணலி - 175, மணலி நியூ டவுன் - 152, வேளச்சேரி - 152, அரும்பாக்கம் - 146, ஆலந்தூர் - 127, அம்பத்தூர் - 100 ஆகப் பதிவாகியுள்ளது.
கடந்தாண்டு தீபாவளியின்போது, காற்று மாசு மிகவும் மோசமான பிரிவில் பதிவாகியிருந்த நிலையில், இந்தாண்டு மிதமான அளவிலேயே பதிவாகியுள்ளது.
அவ்வபோது இடைவேளை விட்டு மழை பெய்ததால் காற்றின் தரம் பெரிதாகப் பாதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க: அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.