தீவிரமடையும் பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை பற்றி...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியிலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் இரு வெவ்வேறு புயல் சின்னங்கள் உருவாகியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

அந்தந்த மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Summary

Intensifying monsoon rains: Chief Minister holds consultation with district collectors

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com