
மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் விழுந்து கிடந்த ராட்சத பாறைகள் வெடிவைத்து அகற்றப்படுகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்குப் பருவமழை துவங்கியுள்ளதால் தற்போது நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் அடர்லி - ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மலை ரயில் பாதையில் பெரிய பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன்.
இதன் காரணமாக கடந்த 19 ஆம் தேதியிலிருந்து இன்று வரை தொடர்ந்து, 4வது நாள்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தண்டவாளத்தில் சரிந்து விழுந்த பாறாங்கற்கள், வெடிவைத்து தகர்த்து அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சீரமைப்புப் பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னரே, மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று சேலம் கோட்டம் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சூழல் சுற்றுலா தளம் மூடல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.