

கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து சூழல் சுற்றுலா தளத்திற்குப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியல் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி அடிவாரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், போளுவாம்பட்டி வனச் சரகத்திற்கு உள்பட்ட கோவை குற்றாலம் அருவியில் பெய்த மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வனத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டதாலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையாலும், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: புதுச்சத்திரம் அருகே வீட்டு சுவர் இடிந்ததில் தாய் மகள் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.