
புதுச்சத்திரம் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து தாய் மகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லையில் புதன்கிழமை அதிகாலை கடலூர் தாலுகா ஆண்டாள் முள்ளி பள்ளம் கிராமம் காமராஜர் தெருவைச் சேர்ந்த மணி என்பது மனைவி. அசோதை (69), இவரது மகள் ஜெயா (40) ஆகிய இருவரும் நேற்று இரவு முதல் பெய்த மழையின் காரணமாக தாங்கள் இருந்த ஓட்டு வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டிலிருந்த இருவரும் இறந்துவிட்டனர்.
மகள் ஜெயாபுதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்துவிட்டார். இறந்தவர்களின் உடல்கள் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற் கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவல் அறிந்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே . பன்னீர்செல்வம் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்தவர்களின் இடத்தினைப் பார்வையிட்டு அவர்களின் உறவினருக்கு ஆறுதல் கூறி ஈமச்சடங்குக்கு உதவித்தொகை வழங்கினார்.
இதையும் படிக்க: ஹெலிபேட் கான்கிரீட்டில் சிக்கிய குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.