
தமிழகத்தில் தொடர்ந்து ஒரு சில நாள்களாக கனமழை பெய்து வந்த நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று சற்று மழை தணிந்திருக்கிறது.
இந்த நிலையில், மழை குறித்து கணித்து அறிவித்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் எனப்படும் பிரதீப் ஜான், தன்னுடைய சமூக வலைத்தளத்தில், துவைத்த துணிகளைக் காயப்போட நல்ல நாள் என்று அறிவித்திருக்கிறார்.
பிரதீப் ஜான் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, வட தமிழகத்துக்கு அருகே
வட தமிழக கடற்கரை - புதுச்சேரி அருகே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரேபிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்துடன் இணைந்து தரைப் பகுதிக்கு. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை குறையும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது.
சென்னை நகரின் பல இடங்களிலும் மழை சதம் அடித்திருக்கிறது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 1 முதல் 2 நாள்களுக்கு தமிழகத்துக்கு கனமழையை அளித்துள்ளது. இன்றும் ஒரு சில இடங்களில் அவ்வப்போது திடீரென மழை பெய்யும். சிறிது நேரம் மட்டுமே பெய்யும்.
பின் குறிப்பு; சிவப்பு எச்சரிக்கை மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை அனைத்தும் இந்திய வானிலை ஆய்வு மையங்களால் கொடுக்கப்பட்டதே தவிர, பிரதீப் ஜான் விடுக்கவில்லை. இன்று நல்ல சூரிய ஒளியை அனுபவியுங்கள்.
வீட்டில் துவைத்த துணிகளை உலர்த்த சரியான நேரமாக இருக்கும். ஆனால் திடீரென சிறு தூறல் மழை பெய்யும் அபாயம் உள்ளது. எனவே எச்சரிக்கை.
அடுத்த காற்றழுத்த தாழ்வு 25ஆம் தேதி உருவாகிறது. அது வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக் கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு கரையைக் கடந்ததும், அடுத்து உருவாகும் தாழ்வு குறித்த தெளிவான தகவல்கள் கிடைத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.