கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் 19 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! முழு விவரம்...

தமிழகத்தில் 19 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...
Published on

தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 19 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுவை உள்ளிட்ட தென்மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த 2 நாள்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, திருச்சி, புதுச்சேரி மற்றும் காரைக்கால்

பள்ளிகளுக்கு மட்டும்

சென்னை, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், திருப்பூர், கரூர் மற்றும் நாமக்கல்

Summary

Which district schools and colleges are closed today?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com