கரூர் பலி! நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை!

சிபிஐ குழுவினர் முதல் முதலாக தங்கள் அறிக்கையை கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றோர்
கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றோர்
Published on
Updated on
2 min read

கரூரில் விஜய் பரப்பரையின்போது ஏற்பட்ட கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ குழுவினர் வியாழக்கிழமை காலை முதல் முதலாக தங்கள் அறிக்கையை கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி த.வெ.க தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு நபர் ஆணையம் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை ரத்து செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய 6 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் கடந்த 15ந் தேதி கரூர் வந்தனர்.

பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணையை தொடங்கினர். சிறப்பு புலனாய்வு குழு ஐஜி அஸ்ராகர்க் தலைமையிலான சிறப்பு குழுவினர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கின் ஆவணங்கள் மற்றும் விசாரணை நிலை அறிக்கையை ஒப்படைத்தனர்.

பின்னர் மறுநாள் விசாரணையை தொடங்கினர். சம்பவம் நடந்த வேலுச்சாமி புரத்தில் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மரத்தின் மீது ஏறியதில் மரக்கிளை முறிந்து விழுந்தது. இது தொடர்பாக வனத்துறையின் ஆவணங்களை பெற்று வனத்துறையினரிடம் சிபிஐ குழுவினர் விசாரணை நடத்தினர். சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமி புரத்தை காரில் சென்று பார்வையிட்டனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 19ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் குழுவினர் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர். பின்னர் நேற்று இரவு மீண்டும் கரூர் திரும்பினர்.

இதையடுத்து இன்று விசாரணையை துரிதப்படுத்துகிறார்கள். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் படுகாயம் அடைந்தவர்கள் காவல்துறை அதிகாரிகள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்கிறார்கள். இதற்கிடையே உச்ச நீதிமன்ற உத்தரவின்படி செய்தியை விசாரணை மேற்பார்வை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தற்போது எல்லை பாதுகாப்பு படை ஐஜியாக பணிபுரியும் தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரி சுமித் சரண் தில்லி ரிசர்வ் போலீஸ் படை ஐஜியாக பணிபுரியும் தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரி சோனல் மிஸ்ரா என்ற இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களும் இன்று அல்லது நாளை கரூர் வந்து சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட உள்ளனர். இந்த நிலையில் எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் கடந்த கடந்த எட்டு நாள்களாக விசாரணை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1ல் நீதிபதி பரத் குமார் முன் அறிக்கையை தாக்கல் செய்தனர். இதையடுத்து தவெக கூட்ட நெரிசல் தொடர்பான சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Summary

The CBI team submitted its first report to the Karur court on Thursday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com