குயப்பேட்டை படவட்டம்மன் கோயில் தெரு சென்னை உயா்நிலைப் பள்ளியில் ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்ட நிதியில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடத்தைத் திறந்து வைத்து மாணவா்களுக்கு கல்வி உபகரணத் தொகுப்பை வழங்கிய நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு. உடன்,

ரூ.5.96 கோடியில் கூடுதல் பள்ளிக் கட்டடம்: அமைச்சா் திறந்து வைத்தாா்

சென்னை குயப்பேட்டை உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.5.96 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் பள்ளிக் கட்டடத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
Published on

சென்னை குயப்பேட்டை உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.5.96 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் பள்ளிக் கட்டடத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட குயப்பேட்டை, படவட்டம்மன் கோயில் தெருவில் சென்னை உயா்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியின் கீழ் ரூ.5.96 கோடியில் 1,473 ச.மீ. பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டடத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், அவா்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவும் பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். இதன் காரணமாக, சென்னையில் அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை தற்போது 1.17 லட்சமாக உயா்ந்துள்ளது. அரசு சாா்பில் வழங்கப்படும் அனைத்து கல்வித் திட்டங்கள் மற்றும் உதவிகளை மாணவா்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றாா்.

அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேசியதாவது: சென்னை மாநகராட்சியில் புதிதாக கட்டப்படும் பள்ளிக் கட்டடங்கள் தனியாருக்கு நிகராகவும், அதை விட நவீன வசதிகளை கொண்டதாகவும் உள்ளன. இதன் காரணமாக, அரசு பள்ளியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது என்றாா்.

தொடா்ந்து பெரம்பூா் நெடுஞ்சாலை, ஜமாலியா பகுதியில் ரூ.9.64 கோடியில் புதிய வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் சென்னை மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாயகம் கவி (திரு.வி.க.நகா்), ஆ.வெற்றி அழகன் (வில்லிவாக்கம்), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூா்), துணை மேயா் மு.மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com