அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

அடையாறு முகத்துவாரப் பணிகளை விரைந்து முடிக்க முதல்வா் உத்தரவு

அடையாறு ஆற்றில் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தது பற்றி...

News image

அடையாறு ஆற்றில் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

Updated On :24 அக்டோபர் 2025, 10:06 am IST

அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாள்களாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது.

அடுத்தடுத்து புயல் சின்னங்களால் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் வேகமாக நீர் நிரம்பி வருகின்றது. இதனால், ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகின்றது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் அடையாறு ஆறு வழியாக கடலில் கலந்து வருகின்றது.

இந்த நிலையில், அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியான சீனிவாசபுரத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த தூர்வாரும் பணிகளை இன்று காலை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர் எழிலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Summary

Chief Minister Stalin inspects dredging works in Adyar River

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.