

தீபாவளிக்கு வெளியான பைசன் திரைப்படத்தை பார்த்து மதிமுக பொதுச் செயலர் வைகோ பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து வைகோ கூறியிருப்பதாவது, 'நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பார்த்த ஒரு சினிமா இதை எடுத்த இயக்குனர் யார் என்று தேடவைத்தது மாரி செல்வராஜ்.
நீங்கள் தூரத்தில் இருக்கிறீர்கள் நான் இங்கிருந்தே பெரும் மன நிறைவோடு பைசனுக்காக உங்களை கட்டி தழுவுகிறேன் மாரி செல்வராஜ். அற்புதமான படைப்பு மாரி அருமை வாழ்த்துக்கள் “. இவ்வாறு தெரிவித்தார்.
அதற்கு இயக்குநர் மாரிசெல்வராஜ் தெரிவித்திருப்பதாவது, பைசன் பார்த்துவிட்டு தொலைபேசியில் அழைத்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக பைசனை பாராட்டி உச்சிமுகர்ந்த பெரும் மரியாதைக்குரிய ஐயா வைகோவுக்கு எங்கள் நன்றியையும் அன்பையும் தெரிவித்து கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் துருவ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் தீபாவளிக்கு வெளியான பைசன் திரைப்படத்தை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.