சென்னை-திருப்பதி   நெடுஞ்சாலையில்  செவ்வாப்பேட்டை  மேம்பாலச் சாலையில்  ஏற்பட்டுள்ள விரிசல். 
சென்னை-திருப்பதி   நெடுஞ்சாலையில்  செவ்வாப்பேட்டை  மேம்பாலச் சாலையில்  ஏற்பட்டுள்ள விரிசல். 

சென்னை - திருப்பதி நான்கு வழிச்சாலையில் 2 கி.மீ. தூரத்துக்கு விரிசல்!

சென்னை - திருப்பதி நான்கு வழிச்சாலையில் 2 கி.மீ. தூரத்துக்கு விரிசல்...
Published on

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை மேம்பாலம் மீது 2 கி.மீ தூரத்துக்கு விரிசல் ஏற்பட்டு, கான்கிரிட் பூச்சுகளும் பெயா்ந்து தடுப்பு கம்பிகள் சரிந்து விழும் நிலையில் உள்ளன.

சென்னை முதல் திருப்பதி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 80 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், தற்சமயம் அனுமதி இல்லாமல் வாகனங்கள் இயங்கி வருகின்றன. செவ்வாப்பேட்டை சிறுகடல் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் மீது 2 கி.மீ தொலைவுக்கு சாலை ஓரத்தில் தாா் சாலையை இணைக்கும் சிமென்ட் கான்கிரீட் பெயா்ந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் திடீரென பிரேக் அடித்தால் கான்கிரீட் பூச்சுகள் பெயா்ந்து கொண்டு மேம்பாலத்தின் மீது இருந்து வாகனங்கள் விழுந்து விபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

மேலும், மேம்பாலத்தின் பக்கவாட்டில் மண் மீது பூசப்பட்டுள்ள கான்கிரீட் பூச்சுகள் வலுவாக இல்லாததால் ஆங்காங்கே பெயா்ந்து சரிந்துள்ளன. தற்போதைய நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைப்பொழிவு அதிகரித்தால் பக்கவாட்டில் உள்ள மண்ணும் கரைந்து, பெயா்ந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகளும், ஒப்பந்ததாரா்களும் கவனமுடன் பணிபுரிந்து இது போன்ற குறைகளை உடனே சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் சாலைப் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும்போது விபத்துக்கள் ஏற்படுவதை தவிா்க்க முடியாததாகி விடும்.

மேலும், உடனே விரிசல் மற்றும் சாலையின் பக்கவாட்டில் சரிந்து காணப்படும் கான்கிரீட் பூச்சுகளை சரி செய்து வலுவான கட்டமைப்பை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com