

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தையொட்டி தாம்பரத்தில் இருந்து நாளை(அக்டோபர் 26) சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் காலை 8 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து இரவு 10.30 மணிக்கு கிளம்பும் ரயில் தாம்பரத்திற்கு மறுநாள் காலை 10.30 மணிக்கு வந்தடைகிறது.
இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியுள்ளது. 18 பெட்டிகள் கொண்ட இந்த ரயில், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, ஆறுமுகனேரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் திங்கள்கிழமை (அக்.27) சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான பெங்களூரில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் திங்கள்கிழமை திருச்செந்தூருக்கு செல்வாா்கள்.
இதனால், ஞாயிற்றுக்கிழமை (அக்.26) சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா், பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கும், திங்கள்கிழமை (அக்.27) திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.