

அடையாறு கடலில் கலக்கும் முகத்துவாரம் பகுதியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(அக். 26) காலை மீண்டும் ஆய்வு மேற்கொண்டார்.
அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள மண் படுகைகளைத் தூர்வாரி அகலப்படுத்தும் பணிகள் செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. முகத்துவாரம் மண் படுகையினால் மூடப்படும் நிகழ்வானது கடல் அலைகளால் தொடர்ந்து ஏற்படுகிறது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமானதால் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் அகலப்படுத்தும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, போர்க்கால அடிப்படையில் படிப்படியாக இயந்திரங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு தற்போது 12 பொக்லைன் இயந்திரங்களும், 4 ஜேசிபி இயந்திரங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(அக். 26) காலை மீண்டும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது முதல்வருடன் நீா்வளத் துறை அதிகாரிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஊழல் ஒழிப்பும் பிஎம்டபிள்யூ கார்களும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.