மோந்தா புயல்: ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

மோந்தா புயல் எச்சரிக்கை காரணமாக ஏனாமில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக். 27) முதல் அக். 29 வரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை
பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை
Published on
Updated on
1 min read

மோந்தா புயல் எச்சரிக்கை காரணமாக ஏனாமில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக். 27) முதல் அக். 29 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது ஆந்திர மாநிலத்தையொட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பகுதியிலும் கனமழை கொட்டித் தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் மாணவர்களின் பாதுகாப்புக் கருதி ஏனாமில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஆந்திர மாநிலத்திலும் என்டிஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்பட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) சனிக்கிழமை மேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

தற்போது, இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது,

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்து. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 நிலவரப்படி, புயல் சின்னமானது சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 780 கி.மீ.தொலைவிலும், காக்கிநாடாவில் இருந்து தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இந்தப் புயல் சின்னம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் அக். 27-இல் தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் ‘மோந்தா’ புயலாகவும் வலுவடையும்.

இந்த மோந்தா புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் அக். 28-இல் தீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும்.

அப்போது, மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் தரைக் காற்று வீசக்கூடும். இதனால் தமிழகம் முழுவதும் பெரிய அளவு மழை பாதிப்பு இருக்காது.

எனினும் புயலின் வேக மாறுபாடு காரணமாக, கரையைக் கடக்கும்போது, வட தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றே உருவாகும் மோந்தா புயல்?

Summary

According to reports, schools and colleges in Yanam will remain closed on October 27, 28, and 29.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com