பட்டுக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது

பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மற்றும் அது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
ஆசிரியர் பாஸ்கர், தலைமை ஆசிரியர் விஜயா
ஆசிரியர் பாஸ்கர், தலைமை ஆசிரியர் விஜயா
Published on
Updated on
1 min read

பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மற்றும் அது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியயை ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுபுலிகாடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரிடம் சனிக்கிழமை அந்த பள்ளியில் ஆசிரியராக இருந்து வரும் கரம்பயம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் (53) என்பவர் பாலியல் சீண்டல் செய்த நிலையில், அந்த மாணவி வீட்டுக்கு சென்றவுடன் இதுபற்றி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் சனிக்கிழமை காவல் நிலையத்திற்கு போன் மூலம் புகார் தெரிவித்துவிட்டு, பள்ளி முன்பு மற்ற பள்ளி மாணவ மாணவிகளுடன் அவரவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினரையும் பெற்றோர்கள் முற்றுகையிட்டு அவர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அந்த பகுதியில் நீண்ட நேரமாக பதட்டமான சூழ்நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்த ஆசிரியர் பாஸ்கரை நீண்ட நேரத்துக்குப் பிறகு அழைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆசிரியர் பாஸ்கரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த செய்தி, பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு தெரிந்திருந்தும் அதை அவர் மறைத்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயா என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

Police arrested a teacher on Saturday night for sexually harassing a schoolgirl near Pattukottai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com