ராகுல் என்னை அண்ணன் என்றுதான் அழைப்பார்! முதல்வர் ஸ்டாலின்

ராகுல் காந்தியுடனான நட்பு குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (கோப்புப்படம்)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

மக்களவை எதிக்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தான் மூத்த அண்ணன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர் இல்லத் திருமணம் விழாவில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

திருமணத்தை நடத்திவைத்த பிறகு மணமக்களை வாழ்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது முதல்வர் பேசியதாவது:

”திமுக ஆட்சியில்தான் சுயமரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் எப்படி பேச வேண்டும் என்று எனக்கு பாடம் எடுத்தவர் சொக்கர்.

திமுகவும் காங்கிரஸ் பேரியக்கமும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற்றுமைக்காக ஒரே சிந்தனையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

காங்கிரஸின் இளம் தலைவராக விளங்கிக் கொண்டிருக்கும் சகோதரர் ராகுல் காந்தி, தனிப்பட்ட முறையில் என்மேல் காட்டக் கூடிய அன்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ராகுல் காந்தியை சகோதரர் என்று அழைப்பதற்கு காரணம் அவர் என்னை அண்ணன் என்று அழைப்பதுதான். அவருக்கு நான் மூத்த அண்ணன்.

அரசியலமைப்பு மட்டுமின்றி கொள்கை உறவாகவும் வலுப்பெற்று இருக்கிறோம். இந்தியாவின் குரலாக இருக்கக் கூடிய புரிதலும் கொள்கை உறவு நிச்சயமாக நாட்டின் எதிர்காலத்தை காக்கும் என்பது உறுதி.” எனத் தெரிவித்தார்.

Summary

Rahul calls me brother! Chief Minister Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com