

நடித்தாலே போதும் நாட்டை ஆளும் தகுதி உள்ளது என மக்கள் நினைப்பது கொடுமையானது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மருது பாண்டியர்களின் 224ஆவது குருபூஜை விழாவையொட்டி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர் சந்தித்து அவர் கூறுகையில்;- கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விஜய்யை பார்க்க செல்கிறார்கள் இந்த அரசியலை எப்படி பார்க்கிறீர்கள்?
விஜய்யே குறிப்பிட்டுள்ளார் வரலாறு திரும்புகிறது என்று.. முத்துராமலிங்க தேவர், மூக்கையா தேவர், கக்கன், காமராஜர் உள்ளிட்ட பெரும் அறிஞர்கள் ஆட்சி செய்த மண் நல்லாட்சி மலர வேண்டும் என போராடிக் கொண்டிருக்கும்போது இது வேற பக்கம் திசை திரும்பி செல்கிறது.
கல்வி அரசியலை கற்பிக்கவில்லை. ஒழுக்கம் நெறிமுறைகளை கற்று தரும் கல்வியாக இல்லாமல், வியாபாரமாக மாறிவிட்டது.
கலையை போற்ற வேண்டியது தான் கலைஞர்களை பாராட்ட வேண்டியதுதான். நடித்தாலே போதும் நாட்டை ஆளும் தகுதி உள்ளது என மக்கள் நினைப்பது கொடுமையானது.
போகப் போக ஒரு சமூகம் வளர்ந்து வாழும் என்று தான் பார்க்கிறோம். ஒப்பனையை அழித்த உடனே அரியணை. நீங்கள் நடிக்கும் போதும் வாழ்வதற்கு நோட்டை கொடுப்போம். நடிப்பை நிறுத்தினால் நாட்டை கொடுப்போம். ஆள்வதற்கு இந்த நிலைப்பாட்டை தமிழ் சமூகம் ஏற்கிறதா..?
இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் நடிப்பு இருக்கிறது. இந்த திரை கவர்ச்சியில் மூழ்கி இருக்கும் தமிழ் இனம் விழிப்புற்று எழவேண்டும். தோற்றுப்போன சமூகத்தில் தேவையற்ற செய்திகளை தலைப்புச் செய்திகளாக மாற்ற வேண்டாம்.
சீமான் பேசிக் கொண்டிருந்தபோது அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சிலைக்கு மாலை அணிவதற்காக வருகை தந்த நிலையில் காவல் துறையினர் செய்தியாளர் சந்திப்பை முடிக்குமாறு அறிவுறுத்தினர். சீமான் அதற்கு ஒரு நிமிடம் பொறுங்கள் நீங்கள் பேசும் நேரத்தில் முடித்து விடுவேன் எனக் கூறினார். காவல் துறையினர் மாறி மாறி பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
ஒரு நிமிடத்திலேயே பேட்டியை முடித்துவிட்டு சிவகங்கை புறப்பட்டுச் சென்றார் சீமான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.