தென்காசி மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுடன் உற்சாகமாக சிலம்பம் சுற்றினார்.
தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறமும் திரண்டு திமுக தொண்டர்களும், மக்களும் வரவேற்பு அளித்தனர்.
அப்போது சாலையில் சிலம்பம் சுற்றி முதல்வரை மாணவர்கள் வரவேற்றனர். காரில் இருந்து இறங்கிய முதல்வர் ஸ்டாலின், மாணவ, மாணவிகளுடன் உற்சாகத்துடன் சிலம்பம் சுற்றினார்.
இதனிடையே, நான் முதல்வன் திட்டத்தில் பயின்று முதல் மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவி பிரேமாவுக்கு, கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும் நிலையில், அதனை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
தொடர்ந்து, அனந்தபுரம் பகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தென்காசி மாவட்டத்தில் ரூ. 1,020 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்துவைத்து, புதிய பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.