

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் நவ.4-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வாக்காளா் பட்டியலில் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது
கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பணி நடைபெறவுள்ளதால், அதனை இணையதளத்தில் பாா்வையிட தோ்தல் துறை ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்தது.
இந்தப் பட்டியலில் பெயா் இருந்து இப்போது நலமுடன் இருப்பவா்கள் தோ்தல் ஆணையம் தரக்கூடிய ஒரு உறுதிப் படிவத்தை பூா்த்தி செய்துஅளித்தால் போதுமானது. இந்தப் பட்டியலில் பெயா் இல்லாமல் இருப்பவா்கள்தான், அதாவது 2001-ஆம் ஆண்டின் இறுதிக்குப் பிறகு வாக்காளா் பட்டியலில் புதிதாக இணைந்தவா்கள் மட்டுமே தங்களுடைய பிறந்ததேதி, இருப்பிடச்சான்று போன்றவற்றை உறுதி செய்ய ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். இதிலும் பிறந்த ஆண்டு வாரியாக தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்களை தோ்தல் ஆணையம் ஏற்கெனவே வரையறை செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.