

பங்குச் சந்தை வணிகம் இன்று (அக். 29) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 88 புள்ளிகள் உயர்வுடனும் நிஃப்டி 26,000 புள்ளிகளுக்கு அருகிலும் வணிகம் தொடங்கியது.
காலை 10.30 மணி நிலவரப்படி மெட்டல் மற்றும் பார்மா துறை பங்குகள் ஏறுமுகத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வணிக நேரத் தொடக்கத்தில் 88 புள்ளிகள் உயர்ந்து 84,663 ஆக வணிகமானது. காலை 10.30 மணி நிலவரப்படி 313.27 புள்ளிகள் உயர்ந்து 84,941 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது.
இதேபோன்று, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, வணிக நேரத் தொடக்கத்தில் 25,982 புள்ளிகளாக வணிகமானது. காலை 10.30 மணி நிலவரப்படி 112.60 புள்ளிகள் உயர்ந்து 26,061புள்ளிகளாக வணிகமாகி வருகிறது.
22 நிறுவனப் பங்குகள் உயர்வு
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களின் பங்குகளில் 22 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் வணிகமாகி வருகின்றன. எஞ்சிய 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவுடன் காணப்படுகின்றன.
அதிகபட்சமாக டாடா ஸ்டீல் நிறுவனப் பங்குகள் 2.31% அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக அதானி போர்ட்ஸ் 2.08%, என்டிபிசி 1.71%, பவர் கிரிட் 1.63%, எச்.சி.எல். டெக் 1.53%, சன் பார்மா 1.13%, ரிலையன்ஸ் 1.05%, இன்ஃபோசிஸ் 0.97% உயர்ந்துள்ளன.
இதேபோன்று ஈடர்னல் -0.99%, எம்&எம் -0.57%, பஜாஜ் ஃபைனான்ஸ் -0.34%, ஆக்சிஸ் வங்கி -0.17% சரிவுடன் வணிகமாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.