கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: 2 மாதங்களுக்கு நீட்டிப்பு!

கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் 2 மாதங்களுக்கு(டிச. 31) நீட்டிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

முதல்வரின் ஸ்டாலினின் உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், மாற்றுத்திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அறிவுசார் திறன் குறைபாடு உள்ளவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக (Online) பெற்றிடும் வகையில், 07.09.2023 முதல் முதற்கட்டமாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகள் அனைவரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை இணையதளம் வழியாக உடனுக்குடன் பெறுகின்ற வசதியினை அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப் படுத்த தேவையான மென்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட பணிகள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNEGA) வழியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து இறுதி கட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இதனை முழுமையாக செயல்படுத்த, மாவட்ட அளவில் முகாம்கள் நடத்த வேண்டி உள்ளதால், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் அக். 31 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை, டிச. 31 வரை மேலும் இரண்டு மாத காலத்திற்க்கு நீட்டித்து பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சட்டமன்ற நிகழ்வில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பயனாளிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, பெற்றிட வழிவகை செய்யப்படும் என அறிவித்ததன் அடிப்படையில்,  இத்திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு பயணியர் மற்றும் பொருள் போக்குவரத்துக் கழகம் (TNMLC) தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) நிறுவனத்துடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அறிவுசார் திறன் குறைபாடு உள்ளவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு இணையதளம் வாயிலாக கட்டணமில்லா பயண அட்டைகளை பெறும் வசதி, முதற்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 07.09.2023 அன்று முதல் அமல்படுத்தப்பட்டது.

பயனாளிகள், இத்திட்டத்தின் வாயிலாக எவ்வித சிரமுமின்றி தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையம் அல்லது  https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2025-26 ஆம் நிதி ஆண்டில் இணையதளம் வாயிலாக பேருந்து பயண அட்டையை புதுப்பிக்க ஏதுவாகவும், இவ்வசதியினை அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் (விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி) விரிவு படுத்தி, புதியதாக பயண அட்டையை பயனாளிகளுக்கு வழங்கவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இதனை செயல்படுத்த மாவட்ட அளவில் முகாம்கள் நடத்த வேண்டி உள்ளதால், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் அக். 31 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை, டிச. 31 வரை மேலும் இரண்டு மாத காலத்திற்க்கு நீட்டித்து அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Department of Transport has announced that the free bus travel cards have been extended for 2 months (Dec. 31).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com