

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாள்களுக்கு முன் உச்சத்திலிருந்த நிலையில், தீபாவளிக்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து வருகின்றது. அந்தவகையில், நேற்று ஒரே நாளில் இருமுறை விலை குறைந்தது. நேற்று மட்டும் ரூ. 3,000 குறைந்தது.
இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் ரூ.135 உயர்ந்து ரூ. 11,210-க்கும், ஒரு சவரன் ரூ. 1,080-ம் உயர்ந்து ரூ. 89,680-க்கும் விற்பனையானது.
மாலையில் வர்த்தகம் நிறைவுபெறும்போது, தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, காலையில் ரூ.1,080, மாலையில் ரூ. 920-ம் உயர்ந்து, ஒரேநாளில் ரூ. 2 ஆயிரம் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை ஒரு சவரன் ரூ.920 உயர்ந்து ரூ. 90,600-க்கும், கிராமுக்கு ரூ.112 அதிகரித்து ரூ. 11,325-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை இன்று காலை ரூ.1 அதிகரித்து ரூ.166 விற்பனையான நிலையில், மாலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் நீட்டிக்கிறது.
தீபாவளிக்கு முன்னதாக ஒரு சவரன் ஒரு லட்சம் தொடும் அளவிற்கு தினமும் இருமுறை விலையுயர்ந்து வந்தது. கடைசியாக ஒரு சவரன் ரூ. 96,600-க்கு விற்பனையானது.
தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்துவரும் நிலையில் மக்கள் மத்தியில் தங்கம் வாங்கலாமா வேண்டாமா என்று யோசிக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த மோந்தா புயல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.