

மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "மோன்தா" தீவிரப்புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, ஆந்திரப் பகுதிகளில் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
நேற்று (அக். 28) காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "மோன்தா" தீவிரப்புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரம் - ஏனாம் கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் -கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு தெற்கே, நரசாபூருக்கு அருகில், நேற்று நள்ளிரவு கரையைக் கடந்தது.
இன்று (அக். 29) அதிகாலை புயலாக வலுக்குறைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுக்குறைந்து, ஆந்திரப் பகுதிகளில் நிலவுகிறது.
இது, மேலும் வடக்கு-வடமேக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுக்குறையக்கூடும்.
நேற்று (அக். 28) மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக். 29) அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 36 மணி நேரத்தில் மேலும், வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும்.
இதன் காரணமாக, அடுத்த 2 நாள்களுக்கு, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பிரசாரம் தொடருமா? அதிமுகவுடன் கூட்டணியா? தவெக விளக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.