

மதுரை மீனாட்சியம்ம ன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் கோயம்புத்தூர், மதுரை, ராமநாதபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பிறகு தமது சொந்த மாநிலமான தமிழகத்துக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் வருகை தந்துள்ளார்.
பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்வதற்காக கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
தமிழக அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் பிரவீன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். மேலும், பாஜக முக்கிய நிர்வாகிகள், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோரும் அவரை வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் அங்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
மாலை 6.45 மணி அளவில் அம்மன் சன்னதி வழியாக கோவிலுக்குள் சென்ற குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்றார்.
தரிசனம் முடித்துவிட்டு இரவு 7.45 மணி அளவில் திரும்பிய குடியரசு துணைத் தலைவர் செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இருக்கும் பகுதியை பார்த்து அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வாழ்த்துகள் என கைகூப்பி வாழ்த்து தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றார்.
மதுரை அரசினர் விருந்தினர் மாளிகையில் இன்றிரவு தங்கும் குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், நாளை காலை விடுதியில் இருந்து மதுரை விமான நிலையம் வருகை தந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் துணை குடியரசுத் தலைவர் வருகையொட்டி மத்திய தொழில் படை பாதுகாப்பு வீரர்கள் மதுரை மாநகர காவல் துறையினர் உட்பட ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.