

போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவில் நடைபெற்ற பிஜெல்ஜினா ஓபன் போட்டியின் மூலம் தமிழ்நாட்டின் 35-வது மற்றும் இந்தியாவின் 90-வது கிராண்ட் மாஸ்டராக ஏ.ஆர். இளம்பரிதி உருவெடுத்துள்ளார்.
இளம்பரிதிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், ``தமிழகத்துக்கு இந்திய சதுரங்கத்துக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் மற்றும் பெருமைக்குரிய தருணமாக இது அமைந்துள்ளது.
இந்தியாவின் 90-வது கிராண்ட் மாஸ்டராரும் தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட் மாஸ்டருமான இளம்பரிதிக்கு வாழ்த்துகள்.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாம்பியன் மேம்பாட்டுத் திட்டத்தின் பயனாளியான இளம்பரிதி, தொடர்ந்து மேலும் பல வெற்றிகளைப் பெறவும் வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.