

தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் விரிவுபடுத்தப்படும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜனும், முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய தமிழிசை,
"தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் விரிவுபடுத்தப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் இணைந்து கூட்டணியை விரிவுபடுத்துவோம் என்று விஜய்யின் தவெக குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். அந்த பதில்தான் எங்களுடைய பதிலும். திமுகவைத் தோற்கடிப்பதில் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது. கூட்டணி வைக்கிறோம் என்று கேட்டதற்காக நாங்கள் பலவீனமானவர்கள் என்பது அல்ல. திமுகவை தோற்கடிக்க வேண்டும். அதுதான் நோக்கம்.
அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு வந்திருக்கலாம். அதுபற்றி கட்சி தலைமை முடிவெடுக்கும். ஆனால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பாஜக ஆதரவு தெரிவிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறிவிட்டார். எஸ்.ஐ.ஆர். என்பது சுத்தப்படுத்தும் ஒரு அமைப்பு. அவர்களுக்கு எதையும் சுத்தப்படுத்தினாலே பிடிக்காது" என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.